Wednesday, 18 September 2013





  1.                        பால்கோவா.....








பால் ஒரு சத்தான உணவு என்கிற நம்பிக்கை காலம் காலமாக இருந்து வருகிறது. கை குழந்தைகளுக்கு தாய்பாலுக்கு மாற்றாக பாலே உணவாக கொடுக்கும் பழக்கம் நம்மிடையே பரவலாக இருந்து வந்திருக்கிறது. இவ்வளவு சிற்ப்பான இந்தப் பால் குடிக்கும் பானமாக தான் பொதுவாக கொள்ளப்படுகிறது. நேரடியாகவோ காபி, டீ போன்றவற்றுடன் சேர்த்தோ நாம் குடித்து வருகிறோம். பாலை தின்பண்டமாக செய்தும் சாப்பிட முடியும். பாலுடன் சீனி சேர்த்து பால் கோவாவாக கிண்டினால் அது ஒரு சுவையான இனிப்பு பலகாரமாக மாறிவிடுகிறது. த்மிழ் நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு என்று ஒரு தனி ருசி உண்டு. அதற்கு காரணம் அந்த பகுதியில் உள்ள பசுக்களிடம் இருந்து கிடைக்கும் பால் என்று சொல்லப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் மண்ணின் சிறப்புத் தன்மையினால் அதில் முளைக்கும் புல்லும் சிறப்பு தன்மையை பெறுகிறது. அந்தப் புல்லை உண்ணும் பசுவின் பாலும் தனி சுவையை பெறுகிறது என்று சொல்லப்படுகிறது. எனவே தான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் கோவா தனி ருசியுடன் திகழ்வதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதி பால் வளமிக்கதாக இருப்பதால் அந்தப் பால் கொண்டு செய்யும் எல்லாமே
சுவையுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுவதற்கு . சரித்திர சான்றாக  ஆண்டாள் பாடிய திருப்பாவையில் ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி... என்னும் பாடலில் வரும் வாங்கக்குடம் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்ததோர் எம்பாவாய் என்ற வரியினை குறிப்பிடுகிறார்கள். பால்கோவாவில் கால்சியம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, மினரல்ஸ் உட்பட பல சத்துகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் த்னி ருசியை உணர்ந்தவர்கள்  மலேசியா, சிங்கப்பூர், அமேரிக்க போன்ற நாடுகளுக்கும் வாங்கிச் செல்கின்றார்களாம்.




No comments:

Post a Comment