Thursday, 14 June 2012

குச்சி பல்பா  நச்சு பல்பாகேட்கும் வரத்தை  எல்லாம் தட்டாமல் கொடுப்பதில் சளைப்பதில்லை நமது புராண சாமிகள். இப்படி முன் பின் யோசியாமல் வரம் கொடுத்து விட்டு ஒரு கட்டத்தில் வரம் பெற்றவனின் அட்டூழியம் தாங்காமல் குத்துதே குடையுதே என்று அலறுவதும் அதே சாமிதான். பிறகு என்னவரம் கொடுத்த சாமியோ அல்லது அந்த சாமியின் பொண்டாடி இல்ல மச்சினன் அவதாரம் எடுத்து உலகத்தை காப்பாத்துவாங்க. நமது புராணகள் பல் வேறு வடிவத்தில் இந்தக் கதையினை திரும்பத் திரும்ப நமக்குச் சொல்லி கொண்டிருக்கின்றன. இந்தப் புராண கதைகளை நம்புவதா வேண்டாமா என்பது அல்ல இப்போது பிரச்சனை. நவீன நாகரிக வாழ்க்கை முறைக்காக பலதை வரம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடி வருகிறோம். ஒருகட்டத்தில் அந்த வரமே நமக்கு ஆப்பு அடிக்கும் போது அலறித் துடிக்கிறோம். தப்பிக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறோம். இதற்கு நல்ல உதாரணம் பிளாஸ்டிக் பொருள்களின் நமது பயன் பாடு. ஒரு விஷயத்தை  எப்போதும் நாம் மிக எளிதாக மறந்து விடுகிறோம். அது தான் நியூட்டனின் மூன்றாவது விதி.பிளாஸ்டிக்கை நமது வாழ்க்கையின் எல்லா மூலைகளிலும் கணக்கு வழக்கின்றி பயனபடுத்தத் தலைப்பட்டோம். இன்று அது நம்மை ஆக்டோபஸ் போல் எட்டு திசைகளிலும் சுற்றி வளைக்கத்  திணறிக் கொண்டிருக்கிறோம்இன்று நமது மண், காற்று, நீர் , உடல் என்று சகலமும் மாசுபட, இந்த விபரீதத்திலிருந்துத் தப்பிக்கும் உபாயம் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளும் புத்தி தான் நமக்குக் கிடையவே கிடையாதே. இப்போது மீண்டும் ஒரு அரக்கன் கையில் நம்மை ஒப்புக் கொடுக்க முனைப்புடன் செயல் பட்டுக்கொண்டிருக்கிறோம்அதுதான் CFL என்கிற குச்சி பல்ப். இந்தகுச்சி பல்பின் சிறப்புகளை ஆஹா ஓஹோ என்று பேசிகொண்டிருக்கிறோம். மின்சார பயன்பாடு குறைவு, மிதமான வெப்பத்தை வெளியிடும் தன்மை, சுற்று சூழல் மாசு கேடு அற்றது என்ற அளவில் ஏராளமான பெருமைகள் அடுக்கப்படுகின்றன. நமது அரசாங்கங்களும் இதற்கு போட்டிப் போட்டுக் கொண்டு சாமரம் வீசத் தொடங்கிவிட்டன. கேரள அரசு குண்டு பல்ப் பயன் பாட்டிற்கு த்டையே விதித்துவிட்டது. தமிழக அரசோ விலையில்லா CFL பல்பை எல்லோருக்கும் தர திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறது. எல்லாம்  சரிதான் எப்போதும் போல நாம் நியூட்டனின் முன்றாம் விதியை சுலபமாக மறந்து கொண்டிருக்கிறோமே  அதற்கு என்ன செய்ய? ஆம் இந்தக் குச்சி பல்பினால் ஆயிரம் நன்மைகள் இருக்கத்தான். செய்கின்றன. ஆனாலும் அது கெட்டுப் போய் பயன்படுதத்த முடியாமல் போகும் போது  அதை அப்புறப்படுத்துவதில் அதாவது டிஸ்போஸ் பண்ணுவதில் மிகவும் கவனம் தேவை என்று  எச்சரிக்கிறார்கள் சுற்றுச்சூழலலாளர்கள். ஆம் அந்த பல்பில் பயன்படுத்தப்படும் பாதரசம் நிலம் நீர் காற்று ஆகியவற்றை மிகக் கடுமையாக பாதிக்கக் கூடியதாக இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. சீனாவில் உள்ள இது போன்ற பல்புகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அங்கு பணிபுரியும் 73 தொழிலாளர்களில் 68 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதற்குக் காரணம் பாதாசம் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது. அந்த பாதரச கேடு கடலில் உள்ள மீன்களயும் விட்டு வைக்கவில்லையாம். இன்னும் சொல்கிறார்கள் கலப்படமே செய்ய முடியாது என்று பெருமைபட்டுக் கொள்ளக் கூடிய தாய் பாலை கூட இது நச்சாக்கிவிடுமாம். எச்சரிக்கிறார்கள்இங்கே நம்மில் எத்தனை பேருக்கு கெட்டு போன குச்சி பல்பை கவனமாக டிஸ்போஸ் பண்ண வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு இருக்கும் என்பது தெரியவில்லை. இன்று பிளாஸ்டிக் அரக்கனின் கோரப்பிடியிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நாம் எப்போது குச்சி பல்பின் குரூரத்திற்கு பலியாகப் போகிறோமோ தெரியவில்லை..
குச்சிபல்ப் பொதியப்பட்டிருக்கும் ஒவ்வொரு அட்டைடப்பாவிலும் mercury presence என்று சிவப்பு எழுத்தால் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகத்தின் சாரம்:
இந்த விளக்கு சிறிதளவு பாதரசத்தை(mercury) கொண்டிருக்கிறது. இதன் தவறான கையாளுதலால் கடுமையான கேட்டை விளைவிக்க முடியும். எனவே கெட்டு போன பின் இந்த பல்பு பாதுகாப்பாகவும் முறையாகவும் தூக்கியெறியப்படுகிறதா என்பதை தயவுசெய்து உறுதி செய்துகொள்ளவும். பாதுகாப்பான தூக்கியெறிதலுக்கும் மேல் தகவலுக்கும் தயவுசெய்து Elcoma வலைதளமான www.elcomaindia.com ஐ பார்க்கவும்.

No comments:

Post a Comment