Tuesday, 9 July 2013நமது இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், ஆங்கிலேயரின் கொடுமைக்கு எதிராகவும், போராடி தன் உடல், பொருள், உயிர் அனைத்தையும் துறந்த உன்னதத் தலைவர்களூள் ஒருவர் வ.உ. சிதம்பரனார் அவர்கள் தென்னாட்டுத் திலகர் என்று போற்றப்பdukiபடுகிற தலைவர் ஆவார். தழிகத்தின் ஒட்டப்பிடாரம் என்னும் ஊரில் 1872ம் ஆண்டு செப்டம்பர் 5ம் நாள் சிதம்பரனார் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் உலகநாத பிள்ளை. தாயார் பரமாயி அம்மாள் ஒட்டப்பிடாரத்தில் பள்ளிக்கல்வியை முடித்த அவர் திருச்சியில் 1896 - ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்து வழக்கறிஞரானார். வெள்ளையர்கள் இந்திய மக்களின் மேல் புரிந்து  வந்த ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் கண்டு நெஞ்சம் பதைத்து விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். வ.உ.சி யின் தன்னமில்லாத தொண்டினை அறிந்த பல இளைஞர்கள் அவரது தலைமையை ஏற்றுக் கொண்டனர். நம் நாட்டு கடலில் கப்பல்விட நமக்கு உரிமை இல்லையா? உப்பு எடுக்க உரிமை இல்லையா? என்று நெஞ்சம் கொதித்த வ.உ.சி நவாய்ச் சங்கத்தைத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்த சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்  வ.உ.சி. இந்திய மக்களின் விடுதலைக்காக தன் வாழ்க்கையையே தியாகம் செய்த தியாகச் செம்மலாக விளங்கியவர் ..சி. தன் வாழ்நாள் முழுதும் மக்களுக்காக உழைத்த அந்த ஒப்பற்றத் தலவன் தனது இறுதி நாளில் குடுபத்தை காப்பாற்ற் முடியாமல் தவித்து  நண்பருக்கு அவர் எழுதிய உயில் நம் கண்களில் கண்ண்ணீரை வரவழைத்து விடுகிறது.. தன் செல்வத்தை எல்லாம் மக்களுக்காக உழைத்து இழந்த அந்த தலைவ்னின் உயிலை பார்க்கும் போது
இன்று மக்களுக்காக உழைக்கிறேன் என்று  சொல்லிக்கொண்டு லட்சம் கோடிகளில் தனக்கு சொத்து சேர்க்கும் அரசியல்வாதிகளின் நினைவு வருவதை தவ்ர்க்க முடியவில்லை.
தூத்துக்குடியிலிருக்கும் மகாஸ்ரீ அ.செ.சு.கந்தசாமி ரெட்டியார் அவர்களுக்குத் தூத்துக்குடியிலிருக்குக்ம் வ.உ.சிதம்பரம் பிள்ளை எழுதிக் கொடுத்த உயில் சாசன் நிருபம்.                                அன்பார்ந்த ஐயா நமஸ்காரம். எனக்கும் எனது குடும்பத்தாருக்கும் கடவுளையும் தங்களையொத்த உண்மை தேசாபிமானிகள் சிலரையும் தவிர இவ்வுலகத்தில் வேறு ஒருவரிருக்கிறதாக எனக்குத் தெரியவில்லை. நான் இனிமேல் அதிக காலம் ஜீவித்திருப்பேனென்று திடமாக நினைக்க வழியில்லை. எனது குடும்ப நிலைமையையும் தாங்கள் முன்னின்று என் குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய காரியங்களையும் இதன் கீழே தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் கீழ்வரும் காரியங்களைச் செய்து முடித்துக் கொடுத்து என் குடும்பத்தைக் காப்பாற்றியருளும்படியாகத் தங்களை சாஷ்டாங்கமாக நஸ்கரித்து கேட்டுக் கொள்கிறேன்.                                      எனது சொத்துக்கள்:                                                                                   எனக்கும் எனது மூத்த மகன் ஆறுமுகம் பிள்ளைக்கும் பாகவிஸ்திரமாகி பல வருஷங்களாகின்றன. அந்தத் தஸ்தாவேஜூ என் மனைவியிடமிருக்கிறது. பம்பாய் என்பெயர் ஆப் இந்திய அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்திற்க்கும், ஓரியண்டல் லைவ் அஷ்யூரன்ஸ் கம்பெனியில் ரூபாய் ஆயிரத்துக்கும் எனது ஆயுளை இன்ஸ்யூரன்ஸ் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கம்பெனிய்லும் ரூபாய் ஐநூறுக்கு மேல் எனக்கு இலாபம்(pprofits) கிடைக்கும் கூடும். ஆனால் நான் ஒவ்வொரு கம்பெனியிலும் ரூபாய் ஐநூறு கடன் வாங்கி இருக்கிறேன். கடனுக்கும் இலாபத்திகும் சரியாய் போகும். இரண்டு கம்பெனிகளுக்கும் கடசி பிரிமியமும்(pirimium) வட்டியும் கட்டப்பட வில்லை. அது கட்டப்பட வேண்டும். மேற்படி இரண்டு இன்ஸ்யூரன்ஸ்  தொகையையும் பல வருஷங்களுக்கு முன்னே என் மனைவி பேருக்கு டிரேன்ஸ்பர் செய்து வைத்திருக்கிறேன். மேற்படி இரண்டு இன்ஸ்யூரன்ஸ் தொகைகள் த்விர என் பாகத்திற்கு ஓட்டபிடாரத்து எனது புஞ்சையில் இரண்டு சங்கிலி நிலமும் பதினாறு மரக்கால் நஞ்சையும் அதன் பக்கத்தில் கிணற்றுத் தோட்டம் என்ற ஒரு நிலமும் இருக்கின்றன. இது தவிர ஓட்டப்பிடாரத்தில் கீழக்காட்டில் 1 ¾ சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்று, 3/4 சங்கிலி கரிசல் புஞ்சை ஒன்றும் இருக்கின்றன. என் மக்களால் அவ்வளவு தூரத்திலுள்ள அந்த இரண்டு புஞ்சைகளையும் பயிர் செய்து கொள்ள முடியாது.  அவற்றை ரூபாய் ஐநூறுக்குத் தங்கள் பேருக்குக் கிரயம் செய்து கொடுத்து விட வேண்டும்ர்ன்று நினைத்துக் கொண்டிருக்கிறேன். ஊட்டப்பிடாரத்தில் ஒரு பழைய காரைக்கட்டு மட்டப்ப வீடு ஒன்று இருக்கிறது. அதன் மச்சுக்கட்டைகள் எல்லாம் இற்றுப் போய் ஆபத்தான நிலைமையில் இருக்கின்றன. மேற்படி மச்சை பிர்த்தெடுத்து சுவர்களை இன்னும் மூன்றடி உயர்த்தி தெக்கு மரக்கட்டை போட்டும் மேல் பக்கமுள்ள இரண்டு சன்னல்களுக்கு நேராகக் கீழ் பக்கம் இரண்டு சன்னல்கள் வைத்தும் அரைவீட்டை எடுத்து விட்டும் தாங்கள் புதுப்பித்துக் கொடுக்க வேண்டும்.app aஅப்படி செய்த பின் அவ்வீட்டில் என் மனைவி மக்கள் குடியிருந்து வரலாம். ஆத்தூர் பிரமு அம்மாள் ரூபாய் எழுநூற்றைம்மதுக்கு என் மனவி பேருக்கு ஒரு அடமான தஸ்தாவேஜ் எழுதிக் கொடுத்திருக்கிறாள். அடமான சொத்துக்கள் தங்களுக்கு முந்திய அடமானம். அடமான் சொத்துக்கள் சுமார்ரூபாய் இரனாயிரத்துக்கு விலை போகும். என் மனைவி அடமான தஸ்தாவேஜைத் தங்கள் பெருக்க் மேடோபர் வாங்கிக் கொள்க. அதற்கு வசூலாகும் தொகையும் மேலே கண்ட என் புஞ்சைக்கிரயம் ரூபாய் ஐநூறும் அவசியமானால் என் மைத்துன்மார் குடும்பத்திலிருந்து என் குடும்பத்திற்குக் கிடைக்க்கூடிய ரூபாய் 1500-ம் நான் தங்களியம் பற்றி வருகிற தொகைக்கு ஈடு செய்து கொள்க. இப்போது ரூபாய் இருநூறுவிலை போகக் கூடிய சட்டப் புஸ்தங்கள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை விற்க வேண்டும்.                             எனது கடன்கள்: தூத்துக்குடி நேஷனல் பேங்க் ஆப் இந்தியா லிமிடெட்டுக்கு ஐந்து மாத வீட்டு வாடைகை (135)           தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி பாக்கி ரூபாய் (30) வன்னியஞ் செட்டியார் எண்ணெய் கடைக்குச் சுமார் ரூபாய் (30) சில்லரைக் கடன் ரூபாய்(60).                                  இன்ஸ்பெக்டர் பிள்ளைக்கு ரூ. 20 சோமநாட்துக்கு ரூ. 16. வேதவல்லிக்கு ரூ. 50. ஆக மொத்தம் ரூபாய்(86) எனது த்ம்பி மீனாட்சி சுந்டரம் பிள்ளைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இப்போது செய்ய வெண்டிய அவசரக் காரியம் ருதுவாகியிர்க்கிற என் மக்களிருவரில் மூத்தவளுக்கு சௌபாக்கியவதி ஆனந்தவல்லி அம்மாளுக்கு விரைவில் கலியாணம் செய்து வைக்க வேண்டும் சரியான மாப்பிள்ளை கிடையாத்தால் தாமதம். இப்போது சுமார் ரூபாய் ஐநூறுக்கு அவளிடத்தில் நகைகள் இருக்கின்றன. இன்னும் ரூபாய் ஐநூறுக்கு அவளுக்கு நகை போட வேண்டும். கலியாணப் பந்தல் ஸ்லவு ஒரு வருஷத்து சீர் சீராட்டு செய்யவும் வெண்டும். அவற்றிற்கு ஒரு கம்பெனி இன்ஸ்யூரன்ஸ் பணம் ரூபாய் 1000-மும் சரியாய் போகும். சௌபாக்கியவதி மரகதவல்லி அம்மாள் கலியாணத்தை இன்னும் இரண்டு வருஷம் கழித்து நடத்தி வைக்கலாம். அவளுக்கும் அவளிடமிருக்கிற நகைகளை சேர்த்து ரூபாய் ஆய்ரத்துக்கு நகை போட வேண்டும். ஒரு வருஷத்து சீர் சீராட்டும் செய்ய வேண்டும். அவற்றிற்கும் மற்றொரு கம்பெனியின் இன்ஸ்யூரன்ச் பணம் 1000-மும் சரியாய் போகும். என் குடும்பத்திறு வரக்கூடிய தொகைகஓ எல்லாம் தாங்களெ வாங்கி வைத்திருந்து கோவாப்பிரேட்டிவ் சொஸைட்டியில் கொடுக்கிற கரண்டிபாஸிட் வட்டி போட்டு கொடுத்டு வர வேண்டும். இந்த நிலைமையில் என் மனைவி மக்களுடைய அன்னவஸ்திர் கல்வி செலவுகளுக்கு யாதொரு ஐவேசுமில்லை. அதற்கு ஒரு நிதிஉண்டு பண்ண நான் முயலுகிறேன். என் நில்ங்களில் நஞ்சை தவிர புஞ்சை சங்கிலி இரண்டும் தோட்டமும் என் தங்கை அன்னவஸ்திரத்திற்காக விடப்பட்டுள்ளன. வீரப்பாண்டிய பட்ட்ணம் பூபாலராயன் இடமிருந்து ரொக்கமே வாங்க வேண்டும். சொத்து ஒன்றும் வாங்கக் கூடாது. திருச்செந்தூர் உண்டியல் கடை சரசிண ஐயர் ரூபாய் இராண்டாய்ரத்து ஐநூறு மாத்திரம் பெற்றுக் கொள்ளச் சம்மத்தித்தால் அவரிடமிருந்து என் மைத்துனர்மார் அடமானத்தை விடுதலை செய்து தஸ்தாவேஜ் எழுதி ரிஜிஸடர் செய்து வாங்க வேண்டும். அவர் ரூபாய் இராண்டாயிரத்து ஐநூறுக்குச் சம்மதிக்காவிட்டாள் அவர் நம்பர் போட்டுக் கொள்ளும்படி விட்டு விட வேண்டும். என் மைத்துனன்மார் சகோதரியாகிய சௌபாக்கியவதி ஆறுமுகத்தம்மாளுக்கு நகைப்பாவத்து வகைக்குக் கொடுக்க வேண்டிய ரூபாய் ஐநூறு அவள் இஷ்டப்படி ரொக்கமாகவோ நகையாகவோ கொடுத்து ரசீது வாங்கிக் கொள்ள வேண்டியது. எனது மைத்துனர்கள் பெரும் செலவாளிகளாய் இருக்கிறபடியால் பாக்கித்தொகையில் யானையப்பபிள்ளை சத்திரத்துப் பக்கத்தில் மரகால் ஒன்றுக்கு ரூபாய் 100 விலைக்கு நல்ல புஞ்சை கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. அதில் மூன்று கோட்டை விரப்பாடு தங்கள் பேருக்குக் கிரயத்திற்கு வாங்கி அவற்றையும் பாக்கித் தொகையையும் என் மைத்துனன் மூவரும் மூன்று பங்கு வைத்ஹு தங்கள் மனைவ் மக்களுடன்அவர்கள் யாதொரு வில்லங்கதிற்கும் உள்படுத்தாமல் அனுபவித்துக் கொள்ளும்படிக்கும் அவர்கள் மக்கள் மெஷார் அடைந்த பின் அவர்கள் சர்வ சுதந்திர பாத்தியமாக அனுபவித்துக் கொள்ளும்படி தாங்கள் அவர்களுக்கு நன்கொடை தஸ்தாவேஜ் எழுதி ரிஜிஸ்தர் செய்து கொடுக்க வேண்டும். என் பெரிய மைத்துனன் சுப்பிரமணிய பிள்ளை ஒருக்கால் கலியாணம் செய்து கொள்ல விரும்பவில்லையானால் அவன் பாகச் சொத்துகளை அவனுடைய சகோதரர் இருவர்களுக்கும் சமமாக பகிர்ந்து நன்கொடை தஸ்தாவேஜில் எழுதி வைக்க வேண்டும். ஆனால் பெரிய மைத்துனன் தது வீட்டை வில்லங்கம் செய்யாத காலம் வரையில் அவன் அன்னவஸ்திர செலவிற்கு அவன் பாகச் சொத்துகளிலிருந்து மற்றைய இருவருக்கும் நபர் ஒன்றுக்கு ரூபாய் ஐநு வீதம் ரூபாய் பத்து மாதம்தோழ்றும் கொடுத்து விடவேண்டும்.   திருச்செந்தூர் வீடுகளில் தெற்கு வீடு சுப்பிரமணியத்துக்கும் வடக்குவீடு வெங்கிடாசலத்திற்கும் சேர வேண்டும். வ்டக்கு வீட்டிற்கு எதிரேய்ள்ள காலிமனைதான் மைனர் குஞ்சேரத்திற்குச் சேரக்கூடியதாக இருக்கிறது. வடக்கு வீட்டையும் தெற்கு வீட்டையும் கிரயம் போட்டு தேர்கு வீட்டிற்கு போகும் கிரயத்தில் அதிகப்படும் தொகையை வெங்கிடாசலத்திற்கும் சுப்பிரமணியன் சொத்துக்களிலிருந்து கொடுக்க வேண்டும். குஞ்சரம் வீடுகட்டுவதற்கு ரூபாய் இவ்வளவு என்று இப்போதே தீர்மானித்து மற்றைய இருவரும் அவருக்குச் செலுத்திவிட வேண்டும். 19 பனை புஞ்சையையும் சமமாக பங்கிட்டு மூன்று பெருக்கும் கொடுத்து விட வேண்டியது. மைனர் குஞ்சரத்திற்குக் கார்ட்9யனாக வெங்கிடாசலத்தயும் ஷையார் அத்தான் சண்முகம் பிள்ளையும் நியமித்து அவனுடைய வரவு செலவுகளுக்குச் சரியான கணக்கு வைத்திருந்து அவன் மெஷாரடைந்த பின் சொத்தியும் கணக்கையும் அவனிடம் ஒப்புக்கும்படியாக நன்கொடை தஸ்தாவேஜில் எழுத வேண்டும். பூபாலராயரிடமிருந்து தொகைபூராவும் வசூலாகிவிட்டால் அவருக்குத் தாங்களும் நான்......................... (இந்த இடத்தில் ஒரு வரி சிதிலம்டைந்துள்ளது) ரூபாய் 1500-ம் நான் என் மைத்துனன்மார் குடும்பத்திற்கு சென்ற பத்துபாடுபட்டு வந்தடற்குப் ப்ரதிபிரயோஜனமாக என் குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டும். பூபாலராயரிடமிருந்து வரவு வந்திருக்கிற தொகைக்கும் பேரேட்டுபடி ஒரு நகல் தயார் செய்வித்து கூடிய விரைவில் எனக்கு கொடுக்கும்படி உத்தரவு செய்க. இதன் பிரதி ஒன்று என் மனவியிடமும் மற்றொன்று என் மைத்துனன் வெங்கிடாசல்மிடமும் கொடுக்கப்பட்டுள்ளன. எல்லாம் வல்ல இறைவன் அருளால் ம்ற்கண்ட காரியங்கள் எல்லாம் தாங்கள் ந்து செய்து முடித்து அருள்புரிக.
வ.உ.சிதம்பரம்பிள்ளை                                             26-10-36.
இந்த உயில் எழுதப்பட்ட 22 நாளில் வ்.உ.சியின் மரணம் நிகழ்ந்து விடுகிறது.