Monday, 23 February 2015ஆனைத்தாவளம்.

குருவாயூர் போகப் போகிறேன்னு சொன்னதும் யானைக் கோட்டம் பாக்காம இருக்க வேண்டாம்ன்னு அனேகமா கேட்டவங்க எல்லாரும்  சொன்னாங்க. யானைக் கோட்டம் எப்படி போக? ஆட்டோ ஒட்டுருவரு கிட்ட கேட்க ஆனக்கோட்டம் தானே. 3 கி.மீ கிலோ மீட்டர் தான் ஏறுங்க போலம். அடுத்த சில நிமிசத்துல இது தான் ஆனக்கோட்டம் இறங்கி பாத்துட்டு வாங்க.  பார்க்க மலையாளி போல் இருந்தாலும் நல்ல தமிழ் பேச்சு. இறங்கி நிமிர்ந்து பாத்தேன். ஆன தாவளம் என்ற பெயர் பலகை கண்ணுல பட்டது. .தாவளம்ன்னா தங்குமிடம் அதாவது place of residenceன்னு தமிழ் லெசிகன் அதாங்கா பேரகராதி செப்புது. ஓகோ ஆனைங்க தங்குற இடமா இது. லேச புரிஞ்சது. பக்கத்திலேயே உள்ளே நுழைய கட்டணம் இவ்வளவுன்னு அறிவிக்கிற ஒரு பலகை. பலகையின் அறிவிப்புக்கு கட்டுப்பட்டு உரியதை செலுத்தி உள்ளே போனா பச்சை பசேல்னு பதினெட்டு ஏக்கரில பரந்து விரிகிற சோலை. திருவாங்கூர் சமஸ்தான கட்ட்டக் கலைய பிரதிபலிக்கிற ஒன்னுரெண்டு பழைய கட்டடங்களோட நவீனபாணி கட்டடங்கள் சிலவுமா இருந்தது ஒரு காலத்தில ராஜாவோட கோட்டையும் தோட்டமுமா இருந்த அந்தப் பகுதி. அங்கங்க பெரிய பெரிய காட்டுமரங்க தொகுப்பு இருக்கறத பாக்கையில அது சோலைனு சொன்னது த்ப்போண்ணு தோணுது. 
இந்த ஆனக்கோட்ட்த்துல அதுதாங்க தாவளத்துல அறுபது ஆனைங்களுக்கும் மேல் இருக்குதாம். சொன்னாங்க. காட்டுமர தொகுப்புங்க தர்ர நினலுல அங்க அங்க ஒத்தை ஒத்தையா ஆனைங்களை கனமான இருப்பு சங்கிலியால கட்டிப் போட்டிருக்காங்க. ஒவ்வொரு ஆனக்கும் மூனு பாகங்க உண்டாம். அது போக ஒரு மாட்டுடாக்டர்ருங்க அதாங்க வெர்ட்னரி டாக்டர் குழுவும் உண்டாம் அப்பப்ப ஆனைங்களோட உடல் நிலையை கண்காணிக்க. இங்க இருக்குற ஆன்ங்களுல ஒரு ஒத்தக்கொம்பனும் உண்டாம். அங்க மொத்தம் ஏழு பிடிகளும் உண்டாம். புரியலையா? பெண் ஆனைகளை சங்க இலக்கியம் இப்படி தானே சொல்லுது.


இதுகளுக்கு அப்பப்ப குளியலும் உண்டு. ஒரு ஆனையின்  குளியல பாக்க வாய்ப்பு கிடைச்சது. ஆனையை படுக்க வச்சு மூனு நாலு பேரு குளிப்பாட்டுறாங்க. அவங்க ஒரு கையில தண்ணி கொட்டுற ஹோஸ் குழாய். மறு கையில பெரிய தும்பு பிரஸ். தண்ணிய கொட்ட வச்சபடியே தும்பு பிரஸால சரட்டு சரட்டுனு அழுத்தி தேய்க்கிறாங்க. கால்பக்கம் ஒருத்தர் தும்பிக்கை மத்தகத்துப் பக்கம் ஒருத்தர் வயித்த ஒருவருன்னு மூணு நாலுபேர் சேர்ந்து ஒரே சமயத்துல ஆனையை குளிப்பாட்டிகிட்டு இருந்தாங்க. ஹோஸ் குழாயின் தண்ணிக் கொட்டலும் தும்பு பிரஸின் அழுத்தமான தேய்ப்பும் சுகமா இருக்குதோ என்னமோ படுத்திருக்கிற ஆனை உடம்பை கொஞ்சமும் அசக்காம கண்ணை மூடிகிட்டு சுருட்டி வச்சிருக்கிற தும்பிக்கை வழியா புஸ்ஸ்ஸு புஸ்ஸ்ஸுனு மூச்சு விட்டுக்கிட்டு குளியலில லயிச்சி போய் இருந்தது.  


இந்த ஆனைகளை எல்லாம் குருவாயூர் தேவசம் போர்டு தான் பராமரிச்சுகிட்டு வருதாம்.  தினசரி அட்டவணைப்படி தினத்துக்கு அஞ்சு  யானைங்க கோயிலுக்குப் போகணுமாம். . அதில் ஒன்று சீனியராகயிருக்கணுமாம். இந்த ஆனைங்களுக்குப் பயிற்சி கொடுக்கிற மாவுத்தங்க அதுங்கக்கிட்ட மலையாளத்துல தான் பேசுறாங்க.  யானையின் ஆயுசுல  ஒரு கட்டத்துல  அதோட  மூளைசெயல்திறன இழந்துடுமாம். அந்த மாதரி சமயத்துல கட்டுப்பாடு இல்லாம செயல்படத் தொடங்கிடுமாம்.  இதை மஸ்தினு சொல்றாங்க.  ஆனைக்கு மதம் பிடிச்சுட்டுன்னு சொறாங்களே அதுதாங்க இது. ஒன்னுரெண்டு மாசம் மூலிகை வைத்தியம் கொடுத்தப் பிற்பாடு ஆனை நார்மலாகிடுமாம். இப்படிபட்ட ஆனைய  தனியே பிரிச்சுக் கட்டுறதும் உண்டாம். இதெல்லாம் தாவளத்துல ஒரு மாவுத்தனை சிநினேகம் பிடிச்சு தெரிஞ்சுகிட்டது.
.